2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது அராலி சரஸ்வதி ம.வி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 10 அணிகள் பங்குபற்றின. முதற்சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் நடைபெற்று தொடர்ந்து அரையிறுதி, இறுதி என நடத்தப்பட்டது.

இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற போது, அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 17:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

சிறந்த ஏய்பவராக அராலி அணியின் எம்.பாலசுமதி, சிறந்த மத்திய வீராங்கனையாக சுழிபுரம் அணியின் ஈ.விதுசா, சிறந்த தடுப்பு வீராங்கனையாக அராலி அணியின் ஏ.அமுதினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .