Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு இரண்டுக்கான, கால்பந்தாட்டத் தொடரின் குழு ஐந்தின் சம்பியனாக, சீதுவை லெவிண் ஸ்டார்ஸ் அணி தெரிவாகியுள்ளது.
குழு ஐந்தின் இறுதிப் போட்டி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில், கடந்த வாரயிறுதில் நடைபெற்றது. சீதுவை லெவிண் ஸ்டார்ஸ் அணியோடு, புத்தளம் நகரின் பிரபலமான லிவர்பூல் அணி எதிர்த்தாடியது.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்தப் போட்டித் தொடரில், குழு சம்பியனாகும் அணியானது, இரண்டாம் கட்ட தொடரில், பல சலுகைகள் கிடைக்கப் பெறுகின்ற, புள்ளிகள் அடிப்படையிலான சுற்றுக்குள் பிரவேசிக்க இருப்பதால், இந்த இறுதிப் போட்டியானது, இரு அணிகளுக்கும் ஒரு சவால் மிகுந்த போட்டியாகவே அமைந்திருந்தது.
போட்டி ஆரம்பித்த நிமிடத்திலிருந்து, இறுதி வரைக்கும் சிறப்பான ஆட்டம் ஒன்றினை புத்தளம் வாழ் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு காணக் கிடைத்தது.
நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரம் நிறைவடைய 15 நிமிடங்கள் இருக்கையில், லிவர்பூல் அணிக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டியினை, அவ்வணியின் சிறந்த வீரர் எம்.எம்.முசக்கீப் கோலாக்கினார். எனினும், இந்தப் பெனால்டியினைத் தொடர்ந்து, லெவிண் ஸ்டார்ஸ் ஆரம்பித்த உதையானது, பந்தினை நேராக லிவர்பூலின் கோல் கம்பத்தினை நோக்கி நகர்த்திச் செல்லப்பட்டு, அடுத்த வினாடியே லெவிண் ஸ்டார்ஸினால் கோல் பெறப்பட்டது. இந்தக் கோலினை, அவ்வணியின் இளம் வீரர் நிஷால் கோலாக்கினார். இதன் அடிப்படையில், 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன போட்டிகளுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் , நடுவர், மேலதிக நேரமாக, இரு அணிகளுக்கும் தலா 10 நிமிட நேரங்களை வழங்கினார். இதில் முதலாவது 10 நிமிட நேரத்தில் இரு அணிகளும் கோல்களைப் பெறவில்லை.
இரண்டாவது 10 நிமிட நேர ஆட்டத்தில், லெவிண் ஸ்டார்ஸ் அணிக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி உதை சந்தர்ப்பத்தை, அவ்வணியின் மற்றுமொரு முன்கள வீரர் ஜீவன் பெர்ணான்டோ கோல் ஆக்கியதால், மொத்த ஆட்ட நேர முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில், லெவிண் ஸ்டார்ஸ் அணி, வெற்றி பெற்று, குழு சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.
இப்போட்டிக்கு நடுவர்களாக, இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளன நடுவர்களான, பீ.டீ.ஷமல்க ரிட்மால், எஸ்.ஏ.எஸ். மதுசங்க, ஜெ.டீ. விதான கமகே ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025