2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது ட்றிக்னோ டைகர்ஸ் அணி

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, சிம் பீச் றிஸோட்  அனுசரணையில், கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு அதன் பகுதித் தலைவர் எம்.எம்.ஏ. சமட் தலைமையில், பிரதிப் பகுதித் தலைவர் ஏ.எம்.எம்.ஹக்கீம் உள்ளிட்ட உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆசிரியர்களின் பங்களிப்புடன்  கணித, உயிரியல் பிரிவு மாணவர்கள் பங்கேற்ற சிம் பீச் றிஸோட்  சம்பியன் கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடர், கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட், ஏ.பி.முஜீன், உதவி அதிபர்களான எம்.எச்.எம்.அபுபக்கர், எம்.ஏ.சலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அனுசரணையாளரும் சிம் பீச் றிஸோட் முகாமைத்துவப் பணிப்பாளருமான  ஏ. அல் – அமீன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

உயர்தர விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த வெட்ஜ் வொரியேர்ஸ், பயோ பிளாஸ்டர்ஸ், ட்றிக்னோ டைகர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில், வெட்ஜ் வொரியேர்ஸ் அணியும் ட்றிக்னோ டைகர்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய, ட்றிக்னோ டைகர்ஸ் அணி, எட்டு ஒவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய , வெட்ஜ்  வொரியேர்ஸ் அணி, எட்டு ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 17 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவிக் கொண்டது. இப்போட்டியில், வெற்றியீட்டிய ட்றிக்னோ டைகர்ஸ் அணி, சிம் பீச் றிஸோட்  சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக ட்றிக்னோ டைகர்ஸ் அணி வீரர் எம்.எம்.சஜாத் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக வெட்ஜ் வொரியேர்ஸ் அணி வீரர் எம்.எம்.றிகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .