Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, தோப்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றது. இதில், தோப்பூர் பிர்லியன், ஷியா ஆகிய இரண்டு அணிகள் மோதியதில் பிர்லியன் விளையாட்டுக் கழகம் 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிர்லியன் விளையாட்டுக் கழகம், ஏழு ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக, அதிகபட்ச ஓட்டமாக, எம்.ஜே.ஜில்ஸாம் ஆட்டமிழக்காமால் 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
92 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஷியா விளையாட்டுக் கழகம், ஏழு ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தளுவிக் கொண்டது. இவ்வணி சார்பாக என்.புஹாரி 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தினை, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் வழங்கி வைத்தார்.இப் போட்டித் தொடரில் தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட 25 அணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago