2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது நிந்தவூர் லகான் அணி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில் 

நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி,  நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த  இறுதிப் போட்டிக்கு  நிந்தவூர் லகான் மற்றும் சம்மாந்துறை யுனிட்டி ஆகிய இரண்டு அணிகள் தெரிவாகின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை யுனிட்டி அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான் அணி, ஐந்து ஒவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றது. இதில், அவ்வணி சார்பாக நிக்ஸி அஹமட் 35, அப்சல் 21 ஓட்டங்களைப் பெற்றனர்.

82  ஓட்டங்கள் என்றும் வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை யுனிட்டி அணி, ஐந்து ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றனர். இதில், அவ்வணி சார்பாக றிஸ்வி 15, பயாஸ் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் லகான் அணி சார்பாக நிக்ஸி அஹமட் ஏழு ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும், றிசாட் இரண்டு ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் மேலதிக 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று நிந்தவூர் லகான் அணி சம்பியனானது.

இறுதிப்போட்டியில் , 21 ஓட்டங்களைப் பெற்று  ஒரு விக்கெட்டினை கைப்பற்றிய லகான் அணியின் வீரர் அப்சல் ஆட்டநாயகனாக
தெரிவு செய்யப்பட்டதோடு, இச்சுற்றுத்தொடரின் சிறப்பாட்டகாரராக நிக்ஸி அஹமட் தெரிவுசெய்யப்பட்டார். 

இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு 10,000 ரூபாயும்,  வெற்றிக்கோப்பையும், தோல்வியுற்ற அணிக்கு 5,000 ரூபாயும் வெற்றிக்கோப்பையும்  வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, எம்.எம்.றினோஸ், வெளிவிவகார செயலாளர் எம்.ஏ.ஜின்னா, விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் உள்ளிட்ட விளம்பர அனுசரணையாளர்கள் மற்றும் நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக்கு கழகத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் முத்தகீன் கழகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .