Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இஞ்ஞாசியார் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லடி, டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான இந்த சுற்றுப்போட்டி கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்று வந்தது.
மட்டக்களப்பு கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, வெபர் மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழகமும் ஏறாவூர் இளந்தாரகை(வை.எஸ்.எஸ்.சி.) விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழகம், 5-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியின் சிறந்த கோல் காப்பாளராக நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழகத்தினைச் சேர்ந்த கோல்காப்பாளர் வீமன் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த வீரராக நாவலடி கோல்ட்பிஸ் வீரர் ஆ.சானுஜன் தெரிவுசெய்யப்பட்டார்.
முதலாடத்தினைப் பெற்ற நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக் கழகம், இரண்டாமிடத்தினைப் பெற்ற ஏறாவூர் இளந்தாரகை (வை.எஸ்.எஸ்.சி.) விளையாட்டுக் கழகம், மூன்றாமிடத்தினைப் பெற்ற மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கான வெற்றிக்கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வில், அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட லீக் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருமான மா.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago