Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 04 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாவட்ட ரீதியாக 60 அணிகளுக்கிடையே திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திய தொடரில், நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது.
சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் விண்மீன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த, நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடிக் கொண்டது. இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில் நிதர்சன் ஒரு கோலினைப் பெற்று சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு முன்னிலையை வழங்கியதுடன், போட்டியின் 40ஆவது நிமிடத்தில், நிரோஜன் (அன்ரனி ஜெனற்) பெற்ற கோலின் மூலம், அவ்வணி தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. இவ்விறுதிப் போட்டியின் நாயகனாக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிரோஜன் தெரிவாகியிருந்தார்.
இதேவேளை, இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்துக்கும் மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாமிடத்துக்கான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது.
இத்தொடரின் நாயகனாக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிதர்சன் தெரிவாகியதோடு, தொடரின் சிறந்த கோல்காப்பாளராக அதேயணியைச் சேர்ந்த சிந்துஜன் தெரிவானதோடு, தொடரின் வளர்ந்து வரும் வீரராக யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்தைத் சேர்ந்த சுபன் தெரிவானதோடு, மக்கள் மனம் கவர்ந்த வீரராக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதிவதனன் தெரிவானதோடு, தொடரின் வளர்ந்துவரும் விளையாட்டுக் கழகமாக வரணி யூத் விளையாட்டுக் கழகம் தெரிவானதோடு, தொடரின் சிறந்த நன்நடத்தையை வெளிப்படுத்திய கழகமாக, மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் தெரிவானது.
இத்தொடரின் ஆரம்ப சுற்றுக்கள் விலகல் முறையில் இடம்பெற்று, எட்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில், நவாலி சென். பீற்றர்ஸ், பொற்பதி சென். பீற்றர்ஸ், விண்மீன், சென். அன்ரனிஸ் ஆகியன ஒரு குழுவாகவும் சென். மேரிஸ், யங்ஹென்றீசியன், கருணையம்பதி கொலின்ஸ், சமரபாகு நியூட்டன் ஆகியன ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்றதுடன், ஒரு குழுவில் முதலிடம் பெற்ற சென். மேரிஸ், மற்றைய குழுவில் இரண்டாமிடம் பெற்ற சென். அன்ரனிஸ் ஆகியன ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதி சென், மேரிஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவானதுடன், மற்றைய குழுவில் முதலிடம் பெற்ற விண்மீன், அடுத்த குழுவில் இரண்டாமிடம் பெற்ற யங்ஹென்றீசியன் ஆகியன மோதிய அடுத்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, விண்மீனும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago