Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு சின்ன ஊறணி காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மின்னொளியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு கருவப்பங்கேணி அன்டனிஸ் விளையாட்டுக் கழகம், இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சின்ன ஊறணி காந்தி விளையாட்டு மைதானத்தில், இலங்கையின் 64 விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்ட மாபெரும் மின்னொளியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்று வந்தது.
ஐந்து ஓவர்கள் கொண்டதாகவும் அணிக்கு ஏழு பேர் பங்குபற்றுவதாகவும் விலகல் முறையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வந்தன.
இந்தநிலையில், இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, சிறப்பாக முறையில் அண்மையில் நடைபெற்றதுடன், இந்த இறுதிப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த கருவப்பங்கேணி அன்டனிஸ் விளையாட்டுக் கழகமும் குறுமண்வெளி ரொபின் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய கருவப்பங்கேணி அன்டனிஸ் விளையாட்டுக்கழகம் மூன்று விக்கெட்டுகளை இழந்து 43ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய, ரொபின் விளையாட்டுக் கழகம், 4.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதன்போது, 30 ஓட்டங்களினால் கருவப்பங்கேணி அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இந்தச் சுற்றுப்போட்டியின், இறுதிப்பரிசளிப்பு நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி எம்.ஜீவானந்தன், பிரதேச கிராம சேவையாளர் லோ.நதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரிக்கட் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான அணிகள் பங்குகொண்ட மின்னொளியிலான கிரிக்கட் போட்டி நடாத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago