2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது மட்டக்களப்பு பாட்டாளிபுரம் சஸ்டேயன்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு இருதயபுரம் எவகிறீன் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட, லீக் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், மட்டக்களப்பு பாட்டாளிபுரம் சஸ்டேயன் விளையாட்டுக் கழகம், 2016ஆம் ஆண்டுக்கான எவகிறீன் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

எவகிறீன் விளையாட்டுக் கழக ஏற்பாட்டில், கழகத்தின்  16ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பதிவு செய்யப்பட  விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, ஒன்பது பேர் பங்குபற்றும், 10 ஓவர்கள் கொண்ட, சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, மட்டக்களப்பு இருதயபுரம் ஈஸ்டன் ஸ்டார் மைதானத்தில் நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட 32 விளையாட்டுக் கழகங்களில், இறுதி போட்டிக்கு, எவகிறீன் விளையாட்டுக் கழகமும் சஸ்டேயன் விளையாட்டு கழகமும் தெரிவாகின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய, எவகிறீன்  விளையாட்டு கழகம், 10 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 53  ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய, சஸ்டேயன் விளையாட்டுக் கழகம், ஐந்து ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று, ஏழு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .