Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் எஸ்.மதுசன் அபராமாகச் செயற்பட, சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை 117 ஓட்டங்களால் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில், 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடத்தியது. இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து, சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மத்திய கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. மதுசன், 62 பந்துகளில் பெற்றுக்கொடுத்த 72 ஓட்டங்களின் உதவியுடன், 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 222 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எஸ்.நிதுசன் 34, ரி.தேனுஜன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக ரதீசன், அனோஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
223 ஓட்டங்களை என்ற வெற்றியிலக்கை நோக்கி நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.பற்றிக்ஸ் அணி, 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 117 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் எவரும் பெரிதாகச் சோபிக்கவில்லை.
பந்துவீச்சில் மத்திய கல்லூரி அணி சார்பாக எஸ்.மதுசன், குகசதுஸ் தலா 3 விக்கெட்டுகளையும், அனஸ்தாஸ், நிதர்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், போட்டியின் நாயகனாகவும் மத்திய கல்லூரி அணியின் எஸ்.மதுசன், சிறந்த பந்துவீச்சாளராக அதே அணியின் குகசதுஸனும், சிறந்த களத்தடுப்பாட்ட வீரராக பற்றிக்ஸ் அணியின் என்.றொசாந்த் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்தச் சுற்றுப்போட்டியின் கடந்த 2015 ஆம் ஆண்டுப் போட்டியில், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago