2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது ஸ்ரீ சண்முக இந்து மகளிர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 31 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்திய 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வலைப்பந்து போட்டியில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி அணியினர் சம்பியனாகினர். 

அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டியானது அண்மையில் நடைபெற்றிருந்ததுடன், இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் இருந்தும் அணிகள் பங்கு கொண்டிருந்தன.

இறுதிப் போட்டியில், ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியும் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா விளையாட்டு பாடசாலை அணியும் மோதியிருந்த நிலையில், இரண்டு அணிகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தன. ஈற்றில் சண்முக இந்து மகளிர் கல்லூரி 24 புள்ளிகளுக்கு  18 புள்ளிகள் என்ற கணக்கில் டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியை தோற்கடித்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X