குணசேகரன் சுரேன் / 2017 ஜூன் 02 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கான இரண்டாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தா, 3.46 மீற்றர்கள் உயரம் பாய்ந்து, புதிய சாதனை படைத்தார்.
இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில், நேற்று (01) நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான திறந்த போட்டியாளர்களுக்கான ஆசிய சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டியிலேயே, இச்சாதனையை அனித்தா படைத்தார்.
ஏற்கெனவே தேசிய மட்ட திறந்த போட்டியில், 3.41 மீற்றர்கள் உயரம் பாய்ந்து சாதனை படைத்த அனித்தா, ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான போட்டியாளர்களின் முதலாவது தகுதிகாண் போட்டியில், 3.45 மீற்றர்கள் உயரம் பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையிலேயே, நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில், தனது சாதனையை மீண்டும் தகர்த்து, புதிய சாதனையை, அனித்தா படைத்தார்.
அனித்தாவின் பயிற்றுவிப்பாளராக, சி.சுபாஸ்கரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago