2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

பாலமுனை சுப்பர் ஓர்க்கிட் விளையாட்டு கழகத்தின் நான்காவது கிரிக்கட் சீருடை அறிமுக நிகழ்வு, கழகத்தின் தலைவர் எம்.எச். நிஸார்த்தீன் ஆசிரியர் தலைமையில் பாலமுனை இரண்டாம் பிரிவின் ஆர்.டி.எஸ் கட்டத்தொகுதியில்  இடம் பெற்றது 

இந் நிகழ்வுக்கு பிரதம அழைப்பாளராக அணுசரனையாளர் எச்.எம். ரேடர்ஸ் முகாமைத்துவ பணிப்பாளரும் கழகத்தின்  உபதலைவருமான எச்.எம். அன்சார் மற்றும் கழக ஆலோசகர்களான அதிபர் பீ. முஹாஜிரீன், பொறியியலாளர் எம்.எச் நௌசாத் மற்றும் விசேட அழைப்பாளர்களாக கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்களான றசீன் (நசீம்), பாயிஸ் (முஸ்தகீர்),  அக்மல் ஆகியோரும் கழகத்தின் செயலாளர் ஜே. சிப்னாஸ், பொருளாளர் கே.எல். ஹர்சான், முகாமையாளர் எஸ்.எச் முர்ஸித், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட வீரர்களும் பொதுச்சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்

இதன் போது கழகத்தை சேர்ந்த வீரர்களுக்கான கிரிக்கெட்  சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .