Editorial / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

போட்டித்தொடரின் முன்னாள் வீரர்கள் சர்வதேச மேடையை அலங்கரிக்க, இலங்கையில் ஒரு வாரத்துக்கு இடம்பெறவுள்ள ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் உலக இறுதிப்போட்டியில் பங்குபற்ற, உலகின் மிகச்சிறந்த கல்லூரிமட்ட கிரிக்கெட் வீரர்கள் தயாராகி வருகின்றனர். கடந்தகாலங்களில் இடம்பெற்ற 6 ரெட்புல் கம்பஸ் கிரிக்கெட் போட்டித்தொடர்களில், இலங்கையின் நிரோஷன் டிக்வெல்ல, இந்தியாவின் கேதார் ராகுல் ஆகியோர், தமது திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.
இந்தாண்டு செப்டெம்பர் 10 - 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக இறுதிப்போட்டியில், மீண்டும் ஒருமுறை, இருபதுக்கு-20 போட்டித்தொடரை, தேசிய பெருமைக்குரிய களமாக கருதுவதை இலக்காகக் கொண்ட, கிரிக்கெட்டின் வளர்ந்துவரும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில், 8 அணிகள் பங்குபெறவுள்ளன. இலங்கை சார்பாக வர்த்தக முகாமைத்துவ கல்லூரியும் (BMS), அவுஸ்திரேலியா சார்பாக சிட்னி பல்கலைக்கழக அணியும், பங்களாதேஷ் சார்பாக சுயாதீன கலைகளுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழக (ULAB) அணியும், சிம்பாப்பே சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய பல்கலைக்கழக (NUST) அணியும், இந்தியா சார்பாக பூனேயிலுள்ள வர்த்தகத்துக்கான மரத்வாட மித்ர மன்டல் கல்லூரி (MMCC College) அணியும், பாகிஸ்தான் சார்பாக ஜின்னா அரச கல்லூரி, நஸிமபாத், கராச்சி அணியும், தென்னாபிரிக்கா சார்பாக வட மேற்கு பல்கலைக்கழக (NWU) அணியும் பங்குகொள்ளவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாகப் பங்குபற்றவுள்ள அணி, இன்னமும் தெரிவுசெய்யப்படவில்லை.
செப்டெம்பர் 10 - 12ஆம் திகதி வரை, குழுநிலைப் போட்டிகள், கொழும்பில் நடைபெறவுள்ளன. அதன் பின்னர், அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
கடந்தாண்டு சம்பியனாகத் தெரிவான BMS அணி, இவ்வாண்டும் இரண்டாம் முறையாக பட்டத்தை வெல்ல இலக்கு வைத்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு சம்பியன் பட்டத்தை வென்ற ஒரே ஒரு கல்லூரி, தென்னாபிரிக்காவின் அசுப்போல் டுக்ஸ் கிரிக்கட் (பிரிட்டோரியா பல்கலைக்கழகம்) மட்டுமே ஆகும்.
22 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago