Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்களுக்கிடையான 2016ஆம் ஆண்டுக்கான சிநேகபூர்வ மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் நேற்று வியாழக்கிழமை(11) நடாத்தப்பட்டது.
திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு திடலில், பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில், 08 அரச திணைக்களங்களைச் சேர்ந்த கழகங்கள் பங்கு பற்றின.
இவ் கிரிகெட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு சுகாதார திணைக்களகமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் தெரிவாகியிருந்தனன. இவ்விரு அணிகளும் சுற்று போட்டியின் ஆரம்பம் முதல் பிரகாசித்தது.
இறுதி சுற்றுக்கு தெரிவான சுகாதார திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலக அணியும் நாணய சுழற்சியில் ஈடுபட்டபோது சுகாதார திணைக்கள அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்போது சுகாதார திணைக்கள அணி பத்து ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் பிரதேச செயலக அணி, எட்டு விக்கெட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் சுகாதார திணைக்கள் அணி ஏழு ஓட்டங்களால் 2016ஆம் ஆண்டுக்கான அரச திணைக்களங்களுக்கிடையிலான சிநேகபூரவ கிண்ணத்தை வெற்றி கொண்டு சம்பியனானது.





4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago