2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுப்பர் 8இல் மன்னார் கில்லரி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 12 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஏழாவது அணியாக மன்னார் கில்லரி விளையாட்டுக் கழகம் நுழைந்துள்ளது.

கில்லரி விளையாட்டுக் கழகம், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற கில்லரி விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் முதற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கில்லரி விளையாட்டுக் கழகம், 30, 38 ஆவது நிமிடங்களில் ரெக்சனின் மூலம் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 48ஆவது நிமிடத்தில் கில்லரி அணியின் கோல்காப்பாளரின் உதையினை, அவ்வணியின் வீரரொருவர் பின் நோக்கி உதைய, பந்து நவஜீவன்ஸ் அணியின் பிரியந்தனின் கால்களில் அகப்பட, அவர், கோல்காப்பாளரின் மேலால் தூக்கிப்போட்டு கோலாக மாற்றினார். அதன் பின்னர், 78ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் அணியின் கெளதமன் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கில்லரி அணியின் தாசன், ரஞ்சா ஆகியோர் பெற்ற கோல்களின் மூலம், 4-2 என்ற கோல்கணக்கில் இறுதியில் கில்லரி வெற்றி பெற்றது.

போட்டியின் நாயகனாக கில்லரி அணியின் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பதக்கத்தினை நா.ரவீந்திரன் வழங்கியதுடன் அணிக்கான பணப்பரிசினை பருத்தித்துறை கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்க மத்தியஸ்தர் ம.நிதர்சன் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .