Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஜமாலியா வித்தியாலய அணி வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் 15 வயதுக்கு உட்பட்ட மைலோ கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளை நடத்தி வருகின்றது.
திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டி, நேற்று வியாழக்கிழமை (15) விபுலாநந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் எட்டு பாடசாலைகளின் அணிகள் பங்கு கொண்டன.
இறுதிப் போட்டியில் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தை எதிர்த்து கிண்ணியா மத்திய கல்லூரி அணி மோதியது.
ஆட்ட நேரம் வரை இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டிருந்தன. வெற்றியைத் தீர்மானிக்க தண்ட உதைகள் (பெனால்டி) 5 வழங்கப்பட்டது. இதனை ஜமாலியா வித்தியாலய அணியினர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
இப்போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரி, உவர்மலை விவேகாநந்தா கல்லூரி, ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயம், கந்தளாய் புகாரி வித்தியாலயம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, வெள்ளைமணல் அல் அசார் வித்தியாலயம் ஆகியன பங்குபற்றின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago