Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 15 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- குணசேகரன் சுரேன், சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளான முழங்காவில் மகா வித்தியாலயம், தர்மபுரம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் தர்மமுழக்கம் கிரிக்கெட் தொடரின் நான்காவது ஆண்டுப் போட்டி, இம்முறை முழங்காவில் மகா வித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மட்டுப்படுத்தப்படாத ஓவர்களைக் கொண்டு, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியானது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இரண்டு பாடசாலைகளின் கிரிக்கெட் வீரர்களின் திறனை மேம்படுத்தவும் வீரர்களுக்கிடையில் நட்புணர்வு, நேர்மை என்பவற்றை வளர்க்கும் பொருட்டும் இந்தப் போட்டியானது ஒழுங்கமைத்து நடத்தப்படுகின்றது.
ஆரம்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டு, 2016ஆம் ஆண்டுகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றியைப் பெற்றது. கடந்தாண்டு நடைபெற்ற போட்டியில் முழங்காவில் மகா வித்தியாலய அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில், இம்முறைப் போட்டியானது நடைபெறுகின்றது. வெற்றி எண்ணிக்கையை அதிகரித்து, தர்ம முழுக்கத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் தர்மபுரம் மத்திய கல்லூரியும் வெற்றி எண்ணிக்கையைச் சமப்படுத்தி கடந்தாண்டு வெற்றியையும் தக்க வைக்கும் நோக்கில் முழங்காவில் மகா வித்தியாலய அணியும் களமிறங்குகின்றன.
முழங்காவில் மகா வித்தியாலயம், கனகரட்ணம் கஜனின் நேர்த்தியான, இளமைத் துடிதுடிப்பான பயிற்றுவிப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறை முழங்காவில் வெற்றியைப் பெற காரணமாகவிருந்த அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சற்குணராஜா துஸ்யந்தனிடம், பயிற்சி பெற்று வளர்ந்த பயிற்றுநராக கனகரட்ணம் கஜன் உருவாகியுள்ளார்.
அணி இம்முறை சகலதுறை வீரர் கே. கிருஸ்ணராஜ்ஜின் தலைமையில் களமிறங்குகின்றது.
ரி.ஜெயந்தன் (அணி உபதலைவர், சகலதுறை வீரர்), வி. சதுஜன் (துடுப்பாட்ட வீரர்), எஸ். தனுஜன் (துடுப்பாட்ட வீரர்), ரி. நிதர்சன் (விக்கெட் காப்பாளர், துடுப்பாட்ட வீரர்), எஸ். டினோஜன் (சகலதுறை வீரர்), ரி. றஜீவன் (சகலதுறை வீரர்), எஸ். சிலம்பரசன் (சகலதுறை வீரர்), எம். பவிதரன் (துடுப்பாட்ட வீரர்), எம். எழிலரசன் (பந்துவீச்சாளர்), ஜி. தனுஜன் (பந்துவீச்சாளர்), யு. சாரங்கன் (பந்துவீச்சாளர்), பிறின்சன் (பந்துவீச்சாளர்), எல். மதுசன் (துடுப்பாட்ட வீரர்). எஸ். சஜீதரன் (துடுப்பாட்ட வீரர்) ஆகிய வீரர்கள் அணியை வலுவூட்டுகின்றனர்.
தர்மபுரம் மத்திய கல்லூரி, ஞா. யோகீசனின் சிறப்பான அனுபவம் மிக்க பயிற்றுவிப்பின் கீழ், சிறப்பான அணி உருவாக்கப்பட்டுள்ளது. அ. லோயேந்திரனின் தலைமையில் அணி களமிறங்குகின்றது.
அணியை மேலும் பலம்சேர்க்கும் வகையில், க. ரொசான் (அணியின் உபதலைவர்), த. ஜீவிதன், க. நிவேந்திரன், த. பிரணவன், ஜெ. சுபேசன், நா. நிலக்சன், நா. யதுசன், கு. யசிந்தன், கு. சர்மிளன், த. எப்சியன், ப. துஸ்யந்தன், சு. டானியல், த. பானுசன், சி. பிரதீபன், இ. சதீசன், க. தரணீதரன் ஆகியோர் உள்ளனர். அணியின் முகாமையாளராக ம. சசிக்குமார் உள்ளார்.
30 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago