2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திகன, இரஜவெல்ல இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை

Editorial   / 2023 மே 09 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்ற இலங்கை தேசிய கனிஸ்ட தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ள  திகன, இரஜவெல்ல இந்து கல்லூரியின் மாணவர்கள் மூவர், விளையாட்டுப் போட்டியில் தங்களுடைய திறமையை காண்பித்து தங்கம், வெங்கல பதக்கங்களைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

2023 ற்கான Junior national  championship போட்டியில், 

18 வயதுக்கு  கீழ்  பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப்போட்டியியிலும், 2000 மீற்றர் தடைத்தாண்டல் போட்டியிலும் பங்கேற்ற என். அபினயா முதலிடத்தை பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கிக்கொண்டார்.

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப்போட்டியில் H.அபினேஸ் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார். இப்போட்டியில்,

R.விதுர்சன் ஆறாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

23 வயதுக்கு உட்பட்ட தடைத்தாண்டல் போட்டியில் ஆர்.யதீசன்  மூன்றாம் இடத்தினை பெற்று வெங்கல பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .