Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 நவம்பர் 02 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்
அமரர் ஓய்வு பெற்ற அதிபர் சாமித்தம்பி சரவணமுத்துவின் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட திடலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் அன்னாரது புதல்வர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து- நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
4,000,000 ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு அரங்குக்கான முதலாவது அடிக்கல்லை, சரவணமுத்துவின் பாரியார் நட்டு வைத்தார்.
இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச அதிபர் கே. கருணாகரன், கௌரவ விருந்தினர்களாக களுவாஞ்சிகுடி பிரதேசசெயலாளர் திருமதி வில்வரெத்தினம் சிவப்பிரியா, மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் எந்திரி என். சிவலிங்கம், கிழக்கு மாகாண உதவிப் பிரதமசெயலாளர் ஜீ. பிரணவன், லகுகல பிரதேசசெயலாளர் ந.நவநீதராசா, கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், துறைநீலாவணைக் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், மத்திய விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
52 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago