Freelancer / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் காரைதீவு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்றது.
இப்போட்டிகளில் இறுதி போட்டியில் காரைதீவு பிரதேசசெயலக பிரிவு அணி கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியுடன் மோதியது.
அதில் காரைதீவு அணி வெற்றி பெற்றது. அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள அவ் அணி தெரிவு செய்யப்பட்டது.
காரைதீவு அணி சார்பாக ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு அணியினர் பெற்றுகொண்டனர்.
இதனிடையே காரைதீவு இராமகிருஷ்ண இளைஞர் அணி ஏலவே ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.



6 minute ago
20 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
33 minute ago