குணசேகரன் சுரேன் / 2018 ஜூன் 26 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய கூடைப்பந்தாட்ட அணியில், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த யோகநந்தன் சிம்ரோன் தெரிவாகியுள்ளார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஏஷியன் சம்பியன்சிப் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கையின் 18 வயதுக்குட்பட்ட அணியிலேயே சிம்ரோன் விளையாடவுள்ளார்.
வட மாகாணப் பாடசாலைகளிலிருந்து தேசிய அணிக்குத் தெரிவாகும் முதலாவது வீரராக சிம்ரோன் மாறியுள்ளார். ஜெயபாலன் ஜெசிந்தனின் சிறப்பான பயிற்றுவிப்பின் கீழ் சிம்ரோன் பல சாதனைகளை படைத்து வருகின்றார்.
2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago