Shanmugan Murugavel / 2016 ஜூலை 31 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
தேசிய மட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளுக்காக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களிலிருந்து நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவில் ஒருவரும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இருந்து மூவரும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்.
திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரியில் கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொண்ட இவ்வீரர்களே தேசியமட்ட போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிசாந்தன் தெரிவித்தார்.
ஆண்களுக்கான தனிநபர் காட்டாவில் கல்முனையை சேர்ந்த எஸ்.பால்ராஜ் தங்கப்பதக்கத்தினையும், ஆலையடிவேம்பை சேர்ந்த கே.சாரங்கன் வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றதுடன், ஆண்களுக்கான குழுக்காட்டாவில் கே. சாரங்கன், கே.ரஞ்சி, எஸ்.சோபனா ஆகியோர் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான தனிநபர் காட்டாவில் கே.அட்சயா வெண்கலப் பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களில் மூவர் ஆலையடிவேம்பு செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த ராம் கராத்தே சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களுக்கான பயிற்சியினை ராம் கராட்டி சங்கத்தின் இலங்கைக்கான போதானசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தி வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago