Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். சுஜிதா
ஒவ்வொரு வருடமும் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் கல்வி அமைச்சு விளையாட்டத்துறை அமைச்சுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதற்கமைய 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட போட்டிகள் நிறைவு பெற்று அதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட அணிகள் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
அதற்கமைய 17 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட ஆணி மத்திய மாகாணத்தின் முதலாம் இடத்தையும் 19 வயதுக்குட்பட்ட அணி மூன்றாம் இடத்தையும் பெற்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பாடசாலை வரலாற்றின் முதற்தடவையாக தேசிய மட்டப் போட்டிக்கு இக்கரப்பந்தாட்ட அணிகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மத்திய மாகாணத்தின் 15 வலயங்களிலிருந்து ஒவ்வொரு வயது பிரிவிலும் 3 அணிகள் வீதம் 45 அணிகள் பங்குபற்றின. தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய கரப்பந்தாட்ட அணிகளை திரு K. ரவீந்திரன் (ஆசிரியர் ஆலோசகர் - உடற்கல்வி) மற்றும் திரு. K . அருள்ராஜ் (ஆசிரியர்) ஆகியோரால் பயிற்சி வழங்கப்பட்டு வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago