2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேசிய விளையாட்டில் பங்குகொள்பவர்களுக்கு சீருடை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  நா.நவரத்தினராசா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெறவுள்ள விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகளுக்கான சீருடைகள் வடமாகாண உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தால் வியாழக்கிழமை (17) வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையிலுள்ள முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சீருடைகள் வழங்கப்பட்டன.

புலம்பெயர்ந்து வெளிநாட்;டில் வாழும் அன்பர் ஒருவரின் 80 ஆயிரம் ரூபாய் நிதியுதவியில் இந்தச் சீருடைகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு  பிரதிக் கல்விப் எஸ்.ஜெயகாந்தனிடம்; உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.தர்மகுமாரன் சீருடைகள் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .