Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இலங்கையின் 42ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி, கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (02) வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தேசிய விளையாட்டுப் போட்டி வடக்கில் முதன்முறையாக நடத்தப்பட்ட, பெருமையுடன் நடைபெற்றது.
இலங்கையின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீர, வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர். சிறப்பம்சமாக ஒலிம்பிக் வெள்ளிப்பதக்க வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க கலந்துகொண்டார். பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒலிம்பிக் மேடையில் சுடர் ஏற்றப்பட்டது.
சபாநாயகர் கருஜெயசூரிய இந்த விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வை மகிழ்ச்சிகரமாக ஆரம்பிக்கும் முகமாக பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து, மாகாண அணிகளின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இதனை அதிதிகள் ஏற்றுக்கொண்டனர்.
விளையாட்டு நிகழ்வு ஆரம்பமானது முதல் மேல் மாகாண வீர, வீராங்கனைகளின் ஆதிக்கம் மேலொங்கிக் காணப்பட்டது. இரண்டாவது நாள் முடிவிலேயே அவர்கள் 100 தங்கங்கள் என்ற நிலைக்கு தங்களை உயர்த்திக் கொண்டனர்.
நீச்சல் போட்டியில் மாத்திரம் 32 தங்கப் பதக்கங்களை மேல் மாகாண அணி பெற்றுக்கொண்டது.
வடமாகாணம் சார்பில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வீராங்களை ஜெகதீஸ்வரன் அனித்தா, கோலூன்றி பாய்தலில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து பதிய சாதனையைப் படைத்தார். சொந்த மண்ணில் அதிக பதக்கங்கள் பெறாமை, வடமாகாணத்துக்கு ஏமாற்றமாக அமைந்தது.
113 தங்கம், 74 வெள்ளி, 67 வெண்கலம் என மொத்தமாக 254 பதக்கங்களைப் பெற்ற மேல் மாகாணம், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. 33 தங்கள், 29 வெள்ளி, 43 வெண்கலம் என 105 பதக்கங்களைப் பெற்று தென் மாகாணம்இரண்டாமிடத்தையும், 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் மத்திய மாகாணம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் பெற்ற வடமாகாணம், கடைசி இடத்தைப்பெற்றது.
சிறந்த வீரனாக கிழக்கு மாகாணத்தின் எம்.ஐ.நிப்ரான், சிறந்த வீராங்கனையாக டபிள்யு.கே.எல்.ஏ.நிமாலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, 145 மில்லியன் ரூபாய் செலவில் மீளப் புனரமைக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நிகழ்வாக, இந்த தேசிய விளையாட்டுப் போட்டி திகழ்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாகாண அணிகள், சிறந்த வீர, வீராங்களைகளுக்கு பரிசில்களை வழங்கியதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இறுதிநிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago