2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்டபோட்டி ஆரம்பம்...

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டபாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம்நடாத்தும் அமரர்சௌந்தரநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (16) ஆரம்பமாகியது.

சங்கத்தின் இணைப்பாளர் இ.சற்சொரூபன் தலைமையில் இடம்பெற்றுவரும்இப்போட்டிகளின்  ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா உதவி மாவட்ட செயலாளர் ம.சபர்ஜா கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ்,ஆசிரிய ஆலோசகர் யூட்பரதமாறன்,ஓய்வுநிலை உடற்கல்வி  ஆசிரியை சாந்தினி சேவியர், மாவட்டவிளையாட்டு உத்தியோகத்தர்,அதிபர்ஜனகரன்,ரெஜினோல்ட் மற்றும் அணி வீரர்கள் உட்படபலர்கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றுப்போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட ஆண்,பெண் வீரர்களை கொண்ட உதைபந்தாட்ட அணிகள்பங்கு பற்றியிருந்தது.  குறித்த சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நிகழ்வுகள் வியாழக்கிழமை(17) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .