Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 14 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

பாலமுனை அல் அறபா விளையாட்டு கழகத்துக்கெதிரான சுதந்திர தின வெற்றிக் கிண்ண இருபதுக்கு - 20 கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் பாலமுனை ட்ரைஸ்டார் விளையாட்டுக் கழகம் வென்றது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அறபா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அறபா, 20 ஓவர்களில் 138 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ட்ரைஸ்டார் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
44 minute ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
20 Feb 2026