Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்

கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையை நிவர்த்தி செய்யும் முகமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக இருந்த எச்.எம். எம் ஹரீஸால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கு செவ்வாய்க்கிழமை (08) ஹரீஸ் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் எனப் பல சவால்களைக் கடந்து ஹரீஸின் முயற்சியின் பயனாக பல்வேறு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் தடாகத்தை விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து கல்முனை மாநகர சபை அடுத்த வாரமளவில் கையேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பிலும் மேலும் இந்த நீச்சல் தடாக பராமரிப்பு, மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்த ஹரீஸ் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இதன்போது கலந்துரையாடினார்.
இந்த நீச்சல் தடாகத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் நீச்சல் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற வசதியாக இருக்குமென்பதுடன், இந்த நீச்சல் தடாக நிர்மாண பணியானது கல்முனை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
52 minute ago
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
8 hours ago