Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு கிழக்கு பிறிமியர் லீக்கின் பிளே ஓவ் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.
இத்தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இவ்வாண்டு மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி, யாழ். துரையப்பா விளையாட்டரங்கு, கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானம், வல்வெட்டித்துறை கழுகுகள் மைதானங்களில் நடைபெற்றன.
சம்பியனாகும் அணிக்கு, ஐந்து மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் அதிகூடிய பரிசில் பொதிகளை உள்ளடக்கிய வகையில் நடைபெறும் இத்தொடரில், கிளியூர் கிங்ஸ், தமிழ் யுனைட்டட், ரில்கோ கொங்கியூறோஸ், மன்னார் கால்பந்தாட்டக் கழகம், ட்ரிங்கோ டைட்டான்ஸ், வவுனியா வொரியர்ஸ், நொதேர்ண் எலைட், முல்லை பீனிக்ஸ், வல்லை கால்பந்தாட்டக் கழகம், மட்டுநகர் சுப்பர் கிங்ஸ், அம்பாறை அவஞ்சர்ஸ், மாதோட்டம் கால்பந்தாட்டக் கழகம் ஆகிய 12 அணிகள் பங்குபற்றின.
அந்தவகையில், ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒரு தடவை மோதிய லீக் சுற்றின் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகளை தொடர்ச்சியாகப் பெற்ற செய்து வந்த ரில்கோ கொங்கியூறோஸ் அணி, தமது எட்டாவது போட்டியிலேயே பிளே ஓவ் சுற்றுக்குத் தகுதிபெறுவதை உறுதிப்படுத் இறுதியாக விளையாடிய 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றிபெற்று, 30 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஓவ் சுற்றுக்குத் தகுதி பெறுகின்றது.
இரண்டாவதாக, கிளியூர் கிங்ஸ் அணி, 11 போட்டிகளில் எட்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் சமநிலையும் பெற்று 25 புள்ளிகளுடனும் மூன்றாவதாக வல்வை கால்பந்தாட்டக் கழகம், 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றிபெற்றும், மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்தும், 24 புள்ளிகளுடனும் நான்காமிடத்தில், மன்னார் கால்பந்தாட்டக் கழகம், 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று, மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்து 24 புள்ளிகளுடன் பிளே ஓவ் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தன.
பிளே ஓவ் சுற்றின் முதல் போட்டியில், புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களையும் பெற்ற, ரில்கோ கொங்கியூறோஸ் அணியும் கிளியூர் கிங்ஸ் அணியும் இன்று மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுடன், தோல்வி பெறும் அணியானது இரண்டாவது சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கும்.
நாளை நடைபெறும் பிளே ஓவ் சுற்றின் இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழகத்தை எதிர்த்து மன்னார் கால்பந்தாட்டக் கழகம் மோதவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி, தொடரிலிருந்து வெளியேறும்.
குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணியானது, பிளே ஓவ்-இன் முதல் போட்டியில் தோல்வியுறும் அணியுடன் மோதும். இந்தப் போட்டியே இறுதிப்போட்டிக்கான இரண்டாவது அணியை தெரிவு செய்யும். இப்போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Jul 2025