2025 மே 15, வியாழக்கிழமை

பி.பி.எல் கிரிக்கெட் தொடர்

Mayu   / 2024 மே 26 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் பி. பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த போட்டிகள் பாடசாலை மைதானத்தில் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற்றன. இதில் பாடசாலை சார்பாகவும் ஒரு அணி பங்குபற்றியதுடன், பழைய மாணவர்களின் 20 அணிகள் பங்குபற்றின. 24ஆம் திகதி 2010 மற்றும் 2014ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்த போட்டியில் 2014 ஆண்டு அணியை சேர்ந்த ரி.சரவணன் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், 2010 அணியை சேர்ந்த எஸ்.டுசியந்தன் சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் வட்டுக்கோட்டை, இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமான ப.தர்மகுமாரன் பிரதம அதிதியாக பங்குபற்றியதுடன், கல்லூரியின் அதிபர் லங்கா பிரதீபன், பழைய மாணவர் சங்கத்தினர், போட்டியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .