Editorial / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், 3.02 மீற்றர் தூரத்தை தாண்டிய யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த நே. டக்சிதா தங்கப் பதக்கத்தை வென்றதோடு புதிய சாதனையை படைத்துள்ளார்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இன்றே, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த ச. ஹெரீனா 3.01 மீற்றர் தூரத்தை கடந்தாண்டு தாண்டிய சாதனையை நே. டக்சிதா முறியடித்திருந்தார். இதே வயதுப் பிரிவில், ச. ஹெரீனா 2.90 மீற்றர் தூரத்தைத் தாண்டி இம்முறை வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.
8 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Mar 2026