Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக், புத்தளத்தில் புதிய கால்பந்தாட்ட தொடர் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
மறைந்த புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்தமாக இந்த புதிய தொடர் ஆரம்பமாகவுள்ளது.
கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான இத்தொடரில் புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் பதிவாகியுள்ள 12 அணியினர் நான்கு குழுக்களாக பிரிந்து போட்டியிட உள்ளனர்.
புத்தளம் லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் லீக்கின் நிர்வாகக் குழு மற்றும் கழக செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போதே இத்தொடர் தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டது.
தொடரின் முதலாவது போட்டியானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது.
ஏ குழுவில் நியூ ஸ்டார்ஸ், அல்-அஷ்ரக், த்ரீ ஸ்டார்ஸ் ஆகிய அணிகளும், பீ குழுவில் ஒடிடாஸ், லிவர்பூல், ட்ரிபிள் செவன் ஆகிய அணிகளும், சி குழுவில் எருக்கலம்பிட்டி, பேர்ள்ஸ், விம்பிள்டன் ஆகிய அணிகளும், டி குழுவில் யுனைடெட், நியூ ப்ரண்ட்ஸ், போல்டன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
23 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
2 hours ago