Shanmugan Murugavel / 2025 ஜனவரி 29 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (24) இடம்பெற்றது.
மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம். பஸ்ரின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில்  மத்தியஸ்தர் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் உயர் பீட உறுப்பினரும், சிரேஷ்ட கால்பந்தாட்ட நடுவரும், உடற்கல்வி போதனாசிரியருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் இந்நிகழ்வுதனை நெறிப்படுத்தினார்.
எதிர்காலத்தில் மத்தியஸ்த்தர் சங்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன. பின்னர் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகக் குழுவினரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தலைவராக மீண்டும் எம்.ஏ.எம். பஸ்ரினும், செயலாளராக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் உயர்பீட உறுப்பினரும், சுற்றுப்போட்டி இணைப்பாளரும், போட்டி ஆணையாளருமான எம். ஜெனூசனும், பொருளாளராக எம். அம்ஜத்தும், உப தலைவராக எம்.ஓ.எம். ஜாக்கிரும், உதவி செயலாளராக ஏ.ஏ.எம். கியாஸும், நிர்வாக உறுப்பினர்களாக லீக் உயர் பீட உறுப்பினர் எஸ்.எம்.ஜிப்ரி மற்றும் எம்.ஜே.எம்.அஷ்ரப்தீன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago