2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புத்தளம் லிவர்பூல் சம்பியன்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால்  முதன்முறையாக 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அணிக்கு தலா 09 பேர்களை கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் புத்தளம் நகரசபையின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக் கலந்து சிறப்பித்தார்.

புத்தளம் காற்பந்து நடுவர் குழு தலைவரான மொஹமட் பஷ்ரின் அவர்களின் பூரண  அனுசரனையுடன் நடைபெற்ற இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் புத்தளத்தின் பழமைவாய்ந்த அணிகளான லிவர்பூல் மற்றும் த்ரீ ஸ்டார்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாமல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பெனல்டி முறையில் 5:4 எனும் கோல் வித்தியாசத்தில் லிவர்பூல் அணி வெற்றியை தனதாக்கி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .