Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.கண்ணன்
யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம், பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய தொடரில், பெண்களில் காங்கேசன்துறை ஐக்கிய அணியும் ஆண்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியுள்ளன. ஆண்களின் “பி” பிரிவு அணிகளுக்கிடையிலான தொடரில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியனாகியிருந்தது.
ஈ.எஸ்.பி நாகரத்தினத்தின் அனுசரணையுடன், அரியாலை சரஸ்வதி சனமூக நிலைய மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் மேற்படி தொடரின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில், காங்கேசன்துறை ஐக்கியம் அணியை எதிர்த்து கோப்பாய் கரீஸ் அணி மோதியது. இதில், காங்கேசன்துறை ஐக்கிய அணி 25-10, 25-12, 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களிலேயே கோப்பாய் கரீஸ் அணியைத் தோற்கடித்து, 3-0 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.
ஆண்களுக்கான “ஏ” பிரிவு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து இளவாலை மத்திய அணி மோதியது. இதில், நான்காவது செட் வரை சென்ற போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25-19, 22-25, 25-15, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் இளவாலை மத்திய அணியைத் தோற்கடித்து, 3-1 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.
ஆண்களுக்கான “பி” பிரிவு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணி மோதியது. இதில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 25-23, 25-18, 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களிலேயே புத்தூர் வளர்மதி அணியைத் தோற்கடித்து, 3-0 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.
இவ்விறுதிப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராக, ஈ.எஸ்.பி நிறுவன உரிமையாளர் நாகரத்தினமும் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அதிகாரி க.விஜிதரனும் கௌரவ விருந்தினராக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் நா.குகதாஸும் கலந்து சிறப்பித்தனர்.
50 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
5 hours ago