Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள, டயலொக் டிவிஷன் 2 கால்பந்தாட்டத் தொடரின், முதலாவது சுற்றில், தனது முதலாவது வெற்றிதனை புத்தளம் நகரின் பலம் வாய்ந்த கால்பந்தாட்ட கழகமான லிவர்பூல் அணி பதிவு செய்துள்ளது.
கெக்கிராவை யுனைட்டட் அணியினை 5-1 என்ற கோல்கணக்கினால், இலகுவாக வெற்றி கொண்டதன் மூலம் லிவர்பூல் அணி இந்த வெற்றியை அடைந்துள்ளது.
மேற்படி போட்டியானது, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் கெக்கிராவை யுனைட்டட் அணி முதலாவது கோலினை செலுத்தி லிவர்பூலுக்கு அச்சம் ஊட்டியது.
எனினும் லிவர்பூல் அணியின் வேகமான ஆட்டத்தினால் முதல் பாதியில், ஒரு தண்ட உதை கோல் உட்பட நான்கு கோல்களை லிவர்பூல் அணி பெற்றுக்கொண்டது. இரண்டாவது பாதியில் லிவர்பூல் அணியினர் கோல்களை புகுத்த முயற்சிக்காமல் பந்தினை தமது அணியினரின் கால்களில் தக்க வைத்து கொள்ளும் புதுமையைக் காட்ட துவங்கினர். இந்நிலையில் மற்றுமொரு கோலினும் பெற்றுக்கொள்ளப்பட்டதால் போட்டி நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது.
லிவர்பூல் அணிக்காக அவ்வணியின் முன்கள வீரர்களான நஸீம், ஜெஸீம், முசக்கீர், அலி மற்றும் நஸ்ரி ஆகியோர் கோல்களைப் புகுத்தினர். போட்டிக்கு நடுவர்களாக, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நடுவர்களான, பீ.எம். அஷத், டி.ஆர். கருணாரத்ன, எஸ்.ஏ. மதுசங்க ஆகியோர் கடமையாற்றினர்.
லிவர்பூல் அணியின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை, அண்மைக்காலமாக அவ்வணி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்களும் வெற்றியை நோக்கிய பயணமாகவே அமைந்துள்ளது. லிவர்பூல் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் எச்.எச். நஜீப் கடமையாற்றுவதோடு, அதன் முகாமையாளராக கால்ப்பந்தாட்ட நடுவர் எம்.ஓ. ஜாக்கீர் கடமையாற்றுகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025