Gopikrishna Kanagalingam / 2016 பெப்ரவரி 15 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் பிராந்திய குழு, சம்பியனாக புத்தளம் நகரில் கொடிகட்டிப் பறக்கும் புத்தளம் லிவர்பூல் அணி, பிராந்திய சம்பியனாக மற்றுமொரு மகுடத்தைச் சூடியுள்ளது.
புத்தளம் நகரின் மிகப் பழைமையானதும் மிகப் பலம் வாய்ந்த அணியுமான த்ரீ ஸ்டார்ஸ் அணியினை எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரின் மூன்றாம் சுற்றான குழு சம்பியனுக்கான போட்டியில் வீழ்த்தியதன் மூலம் லிவர்பூல் அணி இந்தச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியானது புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (11) மாலை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்த்து புத்தளம் சாஹிரா கல்லூரி மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
இடைவேளைக்கு முன்பாக இரு அணிகளும் ஒவ்வொரு கோலினைப் பெற்றிருந்தன. இடைவேளைக்குப் பின்னர் த்ரீ ஸ்டார்ஸ் அணி மற்றுமொரு கோலினைப் பெற்றுகொண்டதால் அதனை தொடர்ந்து த்ரீ ஸ்டார்ஸ் அணி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் பலத்த போராட்டங்களின் பின்னர் லிவர்பூல் அணியினர், போட்டியின் முடிவில் கோல் போடும் தமது வழமையான பாணியில் மற்றுமொரு கோலினை செலுத்தியதால் போட்டி மேலும் பலமானது.
போட்டி நிறைவடையும்போது இரு அணிகளுமே தலா இரண்டு கோல்களை பெற்று போட்டி சமநிலையில் காணப்பட்டதால் பிரதம நடுவர் தண்ட உதைக்கு அழைப்பு விடுத்தார். தண்ட உதையில் லிவர்பூல் அணியானது 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
லிவர்பூல் அணிக்காக எம்.முசக்கீர் மற்றும் எச்.எச்.ஹம்ருசைன் ஆகியோரும் த்ரீ ஸ்டார்ஸ் அணிக்காக ஏ.சபீக் மற்றும் எம்.அஸ்ரான் ஆகியோரும் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago