Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில், மகாஜனக் கல்லூரி, ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களைப் பெற்றுள்ளது. தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி, கண்டி போகம்பரை விளையாட்டு அரங்கில், கடந்த வியாழக்கிழமை (13) ஆரம்பித்து, நாளை செவ்வாய்க்கிழமை (18) வரையில் நடைபெறுகின்றது.
இதில், முதல்நாள் நடைபெற்ற 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஸ்ரீஸ்கந்தராசா டிலானி 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
17 வயதுப் பிரிவு பெண்களுக்கான உயரம் பாய்தலில் அதே கல்லூரியின் சந்திரகுமார் ஹெரினா 1.50 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற, 17 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து, சந்திரகுமார் ஹெரினா தங்கப்பதக்கம் பெற்றார்.
இந்த வீராங்கனைகளுக்கு, பயிற்றுவிப்பாளர்களா, சி.சுபாஸ்கரன், சி.கமலமோகன் ஆகியோர் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025