Mayu / 2024 ஜூலை 11 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அஷ்ரப்கான்
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2024 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அக்/அல் - ஹம்றா மகா வித்தியாலயம் மொத்தமாக 31 இடங்களை பெற்றுக் கொண்டது.

இங்கு ஆண்கள் பிரிவில் 21 போட்டிகளும் பெண்கள் பிரிவில் 09 போட்டிகளும் இடம் பெற்றன. இதில் 18 முதலாம் இடங்களையும், 12 இரண்டாம் இடங்களையும் மூன்றாம் இடம் ஒன்றையும் இம்மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இம்மாணவர்களை வழி நடாத்திய அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன் மற்றும் பிரதி உதவி அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான ஆர்.நெளஸாத், ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் ஸஹி ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.




40 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago