Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்
முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விருதோடை, எள்ளுச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள வெள்ளைப்புறா விளையாட்டு மைதானத்தில், இரவுநேர விளையாட்டுக்களை நடத்துவதற்குத் தேவையான மின் விளக்குகள் மற்றும் விளக்குக் கோபுரம் என்பவற்றை, சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் செலவில், விருதோடையைச் சேர்ந்த சமூக சேவையாளரும் தொழிலதிபருமான எம்.ஐ.எம்.ஆசிக் வழங்கி வைத்தார்.
இந்த மின்விளக்குக் கோபுரங்கள், பெருநாள் தினத்தன்று அம்மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியின் போது, அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், எம்.ஐ.எம்.ஆசிக், அவரது சகோதரரும் பிரபல தொழிலதிபர் எம்.ஐ.எம்.நயீம், வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், கற்பிட்டியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.முஸம்மில், ஏ.எச்.எம்.றிஸ்வி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago