Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 மே 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.கண்ணன்
இலங்கையின் கனிஷ்ட பிரிவில், முதன்மை வீராங்கனையாக, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் சிறந்த வீர, வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது.
இதில், கனிஷ்ட பிரிவில், இலங்கையின் முதன்மை வீராங்கனையாக விஜயபாஸ்கர் ஆசிகா தெரிவு செய்யப்பட்டதோடு, இவரின் பயிற்றுநர் விஜயபாஸ்கர், சிறந்த கனிஷ்ட பிரிவினருக்கான பயிற்றுநராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வி.ஆசிகா, மலேஷியாவில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, 58 கிலோகிராம் நிறைப் பிரிவில், 136 கிலோகிராம் நிறையைத் தூக்கி, வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025