Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ. றமீஸ்
இலங்கைக்கு வாருங்கள் எனும் தொனிப்பொருளில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தில் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற அரை மரதனோட்டப் போட்டியில் ஆண்களில் டி.டபிள்யூ. ரத்னபால முதலிடத்தைப் பெற்றதோடு, பெண்களில் தெரேசா மிடர் முதலிடத்தைப் பெற்றார்.
ஆண்கள் பிரிவின் 21.1 கிலோ மீற்றர் மரதனோட்டப் போட்டியில் கெலும் தர்மபால இரண்டாமிடத்தையும், ஸ்டீபன் பார் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்களில் ஜெவான் பொனரோ இரண்டாமிடத்தையும், லோரா மெகென்ஸி மூன்றாமிடத்தைப் பெற்றனர்.
10 கிலோ மீற்றர் மரதனோட்டப் போட்டியில் மார்க்னெஸ் முதலாமிடத்தையும், சப்னாஜ் உபைதுல்லா இரண்டாமிடத்தையும், ஜிராட் பீர்னி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
சிறுவர்களுக்கான ஐந்து கிலோ மீற்றர் மரதனோட்டப் போட்டியில் றிஹான் முதலாமிடத்தையும், மொஹானி இரண்டாமிடத்தையும் றினோஸ் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
சுமார் 200 இற்கு அதிமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .