Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 08 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
நான்காவது தேசிய மட்ட ‘முவே தாய்’ 2023 ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு நாள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், கண்டி கஃகழுகமுவ மு.ம. மகாவித்தியாலய கெலிஓயா மாணவன் சஜித் இஸ்மி தாய்’ 2023 சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் .
இலங்கை முவே தாய் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட்டியில் 12, 14, 16, 18, 23 மற்றும் 40 வயது முவே தாய் வீரர்கள் கலந்துகொண்டு அத்தோடு இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை மற்றும் ஐ.எம். ஏ (ஐஆயு ளுசi டுயமெய) உட்பட 29 கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் அதிகமான முவே தாய் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில்12 சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றுள் 06 விருதுகளை இலங்கையின் முன்னணி முவே தாய் கழகமான ‘IMA Sri Lanka’ கழகம் சுவீகரித்தம்மை சிறப்பம்சமாகும்.
119 வீரர்கள் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதிக பதக்கங்களை வென்றெடுத்தனர். (தங்கம் (45), வெள்ளி (22), வெண்கலம் (36).
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago