Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்

கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி, கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவனும், கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களில் ஒன்றான லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழக முன்னணி வீரர்களில் ஒருவராகவும், சிறு வயது முதல் கிரிக்கெட்டில் பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மட்டுமின்றி இலங்கைவாழ் சகலருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹரிஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும், தான் பிரதிநிதித்துவப்படுத்திய கழகங்களின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக அமைந்திருந்து சிறந்த வீரராக திகழ்ந்த இவர் கடின உழைப்பால் இந்த நிலையை அடைந்துள்ளார் என்பதே இங்கிருக்கும் நல்ல விடயம். இவர் மாவட்ட, மாகாண மட்டங்கள், மற்றும் தேசியத் தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு மூர்ஸ் அணி, கட்டார் உள்ளக அணி என பலபோட்டிகளிலும் போராடி தனது திறமைகளை உச்சளவில் காட்டிய சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியளிக்கிறது.
சர்வதேச அளவில் தனது திறமையால் பிரகாசிக்க எம் மண்ணின் வீரரை பாராட்டுவதில் அகமகிழ்கிறேன் என்று ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
13 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
17 minute ago
22 minute ago