2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீண்டும் சம்பியனானது புத்தளம் ட்ரகன்ஸ்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம்.சனூன்

பல வெற்றிக் கிண்ணங்களை தொடராகக் குவித்து, சாதித்துக் காட்டி வரும் புத்தளம் ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகமானது, சம்பியன் கிண்ணம் ஒன்றைப் பெற்று ஒரு வாரம் கழிவதற்கிடையில், மற்றுமொரு சம்பியன் கிண்ணத்தையும் தனதாக்கி சாதனை படைத்துள்ளது.

புத்தளம் மான் கராத்தே கிரிக்கெட் கழகம் நடாத்திய குமார் சங்கக்கார வெற்றிக் கிண்ணத்துக்கான பிரிவு இரண்டு கிரிக்கெட் போட்டித் தொடரிலேயே, ட்ரகன்ஸ் அணி, மற்றுமொரு இந்தச் சம்பியன் தகுதியைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியானது, புத்தளம் இஜ்திமா மைதானத்தில், அண்மையில் நடைபெற்றது. அணிக்கு எட்டுப் பேர்களை கொண்டதாக, ஐந்து ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போட்டித் தொடருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி பூரண அனுசரணை வழங்கி இருந்தார்.

மொத்தம் 12 அணிகள் தொடரில் பங்கேற்றிருந்தன. லீக் சுற்றிலான இந்தத் தொடரின் இறுதி போட்டியில், புத்தளம் ட்ரகன்ஸ் அணியுடன் தொடரை நடாத்திய மான் கராத்தே அணி போட்டியிட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மான் கராத்தே அணி, ஐந்து ஓவர்கள்  நிறைவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரகன்ஸ் அணி, விக்கெட் இழப்பின்றி, 3.3 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பெற்று சம்பியானாகியதோடு, இரண்டாம் இடத்தினை மான் கராத்தே அணி பெற்றுக்கொண்டது.

இறுதி போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக ட்ரகன்ஸ் அணியின் வீரர் எம். ரியாசுதீன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .