Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன், ரஸீம் ரஸ்மீன்
புத்தளம் தம்பபன்னி அல் ஜெஸீரா விளையாட்டுக் கழகம் நடாத்திய, அணிக்கு 07 பேரைக் கொண்ட, 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்துக் கிரிக்கட் போட்டித் தொடரில், மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளதோடு, இரண்டாம் இடத்தை, புத்தளம் மான் கராத்தே அணி பெற்றுக்கொண்டுள்ளது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகளை நினைவுகூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட்ட இத்தொடரானது தம்பபன்னி பொது விளையாட்டு மைதானத்தில், அண்மையில் நடைபெற்றது.
இத்தொடரில், இடம்பெயர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் நகரத்துக்குட்பட்ட 26 அணிகள் பங்கேற்றன.
விலகல் அடிப்படையிலான இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில், முஹம்மதியா அணியும் புத்தளம் மான் கராத்தே அணியும் மோதியதில், முஹம்மதியா அணி வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
சம்பியன் அணிக்கு, வெற்றிக் கிண்ணத்துடன் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், இரண்டாம் இடம்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர் நாயகனாக, முஹம்மதியா அணியின் எம். அன்சாதும், இறுதி போட்டியின் சிறந்த வீரராக முஹம்மதியா அணியின் எம். நிஹாலும் தெரிவாகினர்.
இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதிகளாக முசலி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எம்.எம். பைரூஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி, ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
4 hours ago