2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தின் கில்லாடியான பாடுமீன்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 97ஆவது ஆண்டு நிறைவையொட்டி, யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பாடுமீன் அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, அரியாலை பயிற்சி மைதானத்தில் அண்மையில் மின்னொளியில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடுமீன் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பங்களை ஆக்கிரமித்தன. மேரிஸ் அணியின் மரியதாஸ் நிதர்சன் முதலாவது கோலை அடித்தார். முதல் பாதியாட்டம் அந்தக் கோலுடன் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் பாடும்மீன் அணிக்கு, தண்டனை உதை வாய்ப்பு ஒன்று கிடைக்க, அந்த அணி அதனை கோலாக்கியது. போட்டி நேர முடிவில் 1-1 என்ற கோல்கள் இருந்தமையால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. அதில் பாடுமீன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்த தலா ஒவ்வொரு வீரர்கள், விதிமுறைகளை மீறி ஆடியதாக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்ட வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இந்த இறுதிப்போட்டியின் நாயகனாக பாடும் மீன் அணியின் கோல் காப்பாளர் ஆர்.பிரதீபன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .