Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில், யாழ்ப்பாண மாவட்ட அணிகளுக்கிடையிலான தொடரில், ஜொனியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.
சிங்கராஜா டக்ஸன், பத்மநாதன் லவேந்திரா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சாலும் அருளானந்தம் கானாமிர்தன், மாசிலாமணி ஹரிப்பிரவீன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தாலும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியே, ஜொனியன்ஸ் அணி சம்பியனாகியது.
இதில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 அணிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும், ஜொனியன்ஸ் அணியும் தெரிவு செய்யப்பட்டன. இறுதிப் போட்டி, கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிறங்கியது. ஜொனியன்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 30.5 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் என்.நிசாந்த் 30, எஸ்.சசிதரன் 21, எஸ்.கேதீஸ் 17, ஏ.ஜெயரூபன் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக, சிங்கராஜா டக்ஸன் 4 விக்கெட்டுகளையும் பத்மநாதன் லவேந்திரா 3 விக்கெட்டுகளையும், அலிஅக்பர் சஞ்சயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி, 24.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அருளானந்தம் கானாமிர்தன் 56 ஓட்டங்களையும் மாசிலாமணி ஹரிப்பிரவீன் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கொக்குவில் அணி சார்பாக சி.உத்தமன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago