2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட்: அணிகளின் விவரங்கள்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரெட் புல் கம்பஸ் கிரிக்கெட் உலக இறுதிப்போட்டி, எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை, கொழும்பிலும் காலியிலும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இம்முறை தத்தமது தேசிய மட்ட போட்டித்தொடர்களில் வெற்றியீட்டி தகைமையைப் பெற்ற அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்பே, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், அத்தகைய திறமைகளை வெகுவிரைவில் எமது நாட்டிலும் காணவுள்ளோம்.

இவ்வாறு, இத்தொடரில் பங்குபற்றும் அணிகளின் விவரங்கள் பின்வருமாறு:

இலங்கை: வர்த்தக முகாமைத்துவ கல்லூரி

கம்பஸ் கிரிக்கெட் தொடரின் நடப்புச் சம்பியனான வர்த்தக முகாமைத்துவ கல்லூரியானது, மீண்டும் ஒருமுறை இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, இலங்கையின் சகலதுறை வீரரான வனிது ஹசரங்க, இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் அமில அபொன்சோ ஆகியோருடன், வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கவுள்ளது. 

பங்களாதேஷ்: சுயாதீன கலைகளுக்கான பங்களாதேஷ் பல்கலைக்கழகம் (ULAB)

கடந்தாண்டின் உலக இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ULAB அணியில், பங்களாதேஷின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவர் மஷ்ரபி மோர்தஸாவின் சகோதரரான மொர்ஸலின் மோர்தஸா மற்றும் வயதுசார் குழு மட்ட போட்டிகளில் பங்களாதேஷ் சார்பாக போட்டியிட்டவர்களும், டாக்காவின் லீக் போட்டிகளில் விளையாடிவர்களுமான அவிஷேக் மித்ரா, அன்ஜும் அஹமட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா: சிட்னி பல்கலைக்கழகம்

உலக இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் நோக்கில், தமது தேசிய போட்டித்தொடரில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக சிட்னி பல்கலைக்கழகம் வெற்றியீட்டியுள்ளது. இந்த அணியில் மெல்பேண் நட்சத்திரங்களுடன் பிக் பாஷ் லீக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பந்து வீச்சாளரான தேவ்லின் மெலோன், அவுஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்ட போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட வீரர் ஹென்ரி ஹன்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

பாகிஸ்தான்: ஜின்னா அரச கல்லூரி, நஸிமாபாத், கராச்சி

கடந்தாண்டு இடம்பெற்ற உலக இறுதிப்போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பூர்த்தி செய்ய இவ்வணியினர் தவறியதுடன், முதற்தர கிரிக்கெட்டில் விளையாடிய ஃபய்ஸான் கான், அரசலன் பஸீர், பாகிஸ்தான் சுப்பர் லீக் ஒப்பந்தத்தில் உள்ள ஹசன் மொசின், அம்மட் அலாம் ஆகிய மிகச்சிறந்த வீரர்களுடன், 2015இன் பாகிஸ்தான் சம்பியன்கள் களமிறங்கவுள்ளனர்.  

இந்தியா: வர்த்தகத்துக்கான மரத்வாட மித்ர மன்டல் கல்லூரி,(MMCC College), பூனே

உலக இறுதிப்போட்டியில், MMCCஇன் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டாக இதுவமைந்துள்ளது. எனினும் 2016 இல் இச்சந்தர்ப்பத்தை தவற விட்டிருந்ததுடன், இம்முறை வெற்றி பெற எதிர்பார்த்துள்ளனர். மாநிலங்கள் பிரதிநிதித்துவம் செய்ய கடினமான மஹாராஸ்ட்ரா ரஞ்சி அணியில் விளையாடிய ருடுராஜ் கைக்வாட், ரோஹன் தம்லே போன்ற ஒருசில அதியுயர் உள்நாட்டு திறமைசாலிகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம்: ஹெரியட் வாட் பல்கலைக்கழகம், டுபாய்

2016இல் நடைபெற்ற உலக இறுதிப்போட்டியில் இப்பல்கலைக்கழகமும் பங்குபற்றியிருந்ததுடன், ரோஹிட் சிங், கஹாலிட் ஃபர்ஹன், சிராக் சுரி போன்ற ருயுநு இன் மூன்று தேசிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இம்மூவரில் சுரி மிகச்சிறந்த வீரராவார். இவர் 2017 பருவ போட்டிகளில் குஜராத் லயன்ஸ் அணியுடன் ஐ.பி.எல் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். 

தென்னாபிரிக்கா: வட மேற்குப் பல்கலைக்கழகம்

வடமேற்குப் பல்கலைக்கழகமானது, உலக இறுதிப்போட்டியில் இருமுறை சம்பியன் பட்டத்தை வென்ற பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தை தேசிய மட்ட போட்டித்தொடரில் வீழ்த்தி, உலக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அணியாகவுள்ளது.

சிம்பாப்பே: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழகம்

கம்பஸ் கிரிக்கெட் உலக இறுதிப்போட்டியில் சிம்பாப்பே சார்பாக அணியொன்று இடம்பெறுவது, இதுவே முதற்தடவையாகும். சிம்பாப்பேயின் தேசிய அணியினர் முதல்முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களில் இலங்கையை அண்மையில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X